மெக்காலேவும் அவரது திட்டமும் மிகவும் தூற்றப்படுகிறது. வாரம் ஒரு பதிவாவது எனக்கு வருகிறது.உங்களுக்கும் வந்திருபகும். ஒரு பதிவிற்க்கு எழுதிய பதிவு கீழே.
கைபேசியில் நீண்ட பதில் தட்டச்சிட மிடியவதில்லை.
இந்த Macaulay கதைய ரெம்ப நாள் சொல்லிக்கிட்டு அலைகிறோம்.
வெறுமனே எழுத்தர்களைம்,கணக்கர்களைம் உருவாக்குவது என்றால் இவ்வளவு பெரிய , பரந்த பாடத்திட்டம் தேவை இல்லை. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இன்று வரையான பாடத்திட்டத்தை தேடி பார்க்கவும். இவங்க சொல்றபடி கணக்கர்கள் மட்டும் தேவை என்றால் கூட்டல்,கழித்தல் மட்டுமே போதுமானது.Trigonometryம், differenciationம் 47க்கு அப்பறமே சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்களா?.
மெக்காலே முறை / கல்வி முறை என்பது பொது பள்ளி , பொது பாடத்திட்டத்தை முன்னிலை படுத்தியது. (Public schools and common syllabus for all).
அது தாங்க முடியாமல்தான்் மெக்காலேதான் உங்களை கெடுத்தான்னு தொடர்ச்சியா அவதூறு பிரச்சாரம் செய்த்தை தவிர வேற எதையும் கல்விக்காக எவனும் செய்யலை.
பாடத்திட்டம் மேம்மபடுத்துவதில் உள்ள தாமதம், ஆசியர்களின் தரம் பற்றிய விமர்சனங்கள. உண்மையே ஆனால் பாடத்திட்டத்தின் தரமோ , கல்வித்துறையின் கட்டமைப்போ மெக்காலேயிடம் இருந்தும் எல்லிஸ்ஸிடம் இருந்தே துவங்கியது.
நாம் எந்த ஆணியையும் பிடுங்காமல் வீட்டை கட்டிக்கொடுத்தவனை குறை சொல்லிக்கொண்டு திரிகிறோம்.
No comments:
Post a Comment