Search This Blog

11/13/2018

மெக்காலே-1

மெக்காலேவும் அவரது திட்டமும் மிகவும் தூற்றப்படுகிறது. வாரம் ஒரு பதிவாவது எனக்கு வருகிறது.உங்களுக்கும் வந்திருபகும். ஒரு பதிவிற்க்கு எழுதிய பதிவு கீழே.
கைபேசியில் நீண்ட பதில் தட்டச்சிட மிடியவதில்லை.

இந்த Macaulay கதைய ரெம்ப நாள் சொல்லிக்கிட்டு அலைகிறோம்.
வெறுமனே எழுத்தர்களைம்,கணக்கர்களைம் உருவாக்குவது என்றால் இவ்வளவு பெரிய , பரந்த பாடத்திட்டம் தேவை இல்லை. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இன்று வரையான பாடத்திட்டத்தை தேடி பார்க்கவும். இவங்க சொல்றபடி கணக்கர்கள் மட்டும் தேவை என்றால் கூட்டல்,கழித்தல் மட்டுமே போதுமானது.Trigonometryம், differenciationம் 47க்கு அப்பறமே சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்களா?.
மெக்காலே முறை / கல்வி முறை என்பது பொது பள்ளி , பொது பாடத்திட்டத்தை முன்னிலை படுத்தியது. (Public schools and common syllabus for all).
அது தாங்க முடியாமல்தான்் மெக்காலேதான் உங்களை கெடுத்தான்னு தொடர்ச்சியா அவதூறு பிரச்சாரம் செய்த்தை தவிர  வேற எதையும் கல்விக்காக எவனும் செய்யலை.
பாடத்திட்டம் மேம்மபடுத்துவதில் உள்ள தாமதம், ஆசியர்களின் தரம் பற்றிய விமர்சனங்கள. உண்மையே ஆனால் பாடத்திட்டத்தின் தரமோ , கல்வித்துறையின் கட்டமைப்போ மெக்காலேயிடம் இருந்தும் எல்லிஸ்ஸிடம் இருந்தே துவங்கியது.
நாம் எந்த ஆணியையும் பிடுங்காமல் வீட்டை கட்டிக்கொடுத்தவனை குறை சொல்லிக்கொண்டு திரிகிறோம்.

அகத்தியம்

வடவர் மேன்மையை ஏற்றுக்கொண்ட என் நண்பர்கள் சொல்வது
அகஸ்திய ரிஷிமுனியை நாங்கள்தான் தெற்கே அனுப்பி மொழியற்ற காட்டுவாசிகளுக்காக தழிழ் என்ற மொழியை தோற்றுவிக்க சொன்னோம்.
ஹஸ்தி/ஹத்தி என்றால் வடமொழியில் யானை என்று பொருள். உருவில் யானையின் எதிர்பதமாய்அதாவது உருவில் சிறியவராய் இருந்ததால் அஹஸ்தி . அது தமிழ் உச்சரிப்புபகாக அகத்தியர் ஆனது.

இந்த கதையை பலரும் என்னிடம் சொல்லியுள்ளனர். எப்பொழுதெல்லாம்
இக்கதையை கேட்கவேண்டுமனில் தமிழ் பெருமை பேசினால் போதும்.

அகத்தியத்தை பற்றி பாவேந்தர்
http://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=32

வரியும் மதமும்

அரசாங்கம் வரிகளின் வாயிலாக உற்பத்தி செய்பவனின் வருமானத்தின் சில விழுக்காட்டை பெருவதால் பதிலுக்கு குடிகளுக்கு செய்ய கடமைப்பட்டுள்ளது.
ஆனால் மதமென்ற அமைப்புக்கு செலுத்தப்படும் விழுக்காட்டுக்கு திருப்பியளிக்க தேவையில்லை.
கிடைப்பது ஆரவார ஒலியுடைய மொழியின் பிரசங்கமும் அலங்கார ஒலி/ஒளியுடன் கூடிய சடங்குகளும்தான்.
இது உலகின் அமைப்புப்படுத்தப்பட்ட எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.எனக்கு புரிந்தவரையில்
உழைக்க விருப்பமில்லாத ஒட்டுன்னிகளின் களமே இன்றைய மதம் என்ற அமைப்புகள் .

கடவுள்,மந்திரம்,சாத்திரம்,சோதிடம் ,விதி போன்றவற்றை நம்பி வாழ்தால் நான் என்பதும், என் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையும் குறுகி விடுகிறது. தன் மீதிருக்கும் ஒன்றே எம்மை வழிநடத்துகிறது என்றால் நீ என்ன செய்து சாதித்தாய். வந்தோம் போனோம் என் விதி என்று மறைவாய். இதை எல்லாம் கேள்வி கேட்ட பின்னேதான் மனிதன் வளர்ந்தான்.
அவைகள் எல்லாம் உண்டா இல்லையா என்ற கேள்விகளே எழாமல் இருப்பதால்தான் நான் நானாக  இருக்கிறேன். இல்லயேல் எவையோ ஆட்டுவித்தபடி ஆடும் பொம்மை ஆகிறேன்.
மனிதனாய் வாழ்வதும்
பொம்மையாய் இருப்பதும
அவரவர் விருப்பம்.

Started this blog two years back and started posting random thoughts.
Looking back felt very unorganised and too trivial postings.
Deleted all and starting afresh.
Planning to write more in Tamil which comes naturally to me than in English.
Appreciations and abuses are welcome.